திங்கள், 25 ஜனவரி, 2016

படித்தல் முறை

                                                    படித்தல் முறை

ஆசிரியர் வகுப்பறையில் கற்பித்தல் முறையினை நிகழ்த்தும்போது 20 முதல் 25 நிமிடங்கள் வரையே மாணவர்களால் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியும்.
அதற்குப் பிறகும் மாணவர்களின் கற்றல்திறனை அதிக நேரத்திற்கு எடுத்துச் செல்வது ஆசிரியரின் கற்பித்தல் சாதனையாகக் கருதப்படுகிறது.
மாணவரின் மனநலன் கருதி சுவாரசியமான கதைகள்,பேச்சுகள்,தொடர்ச்சியான பயன்கருதிய சொல்லாடல்கள் இவற்றை எடுத்துச் சொல்லலாம்.படித்தல் வகையில் ஒரு வகையான உரக்கப் படித்தல் முறையினைக் கையாளச்செய்யலாம்.காரணம் பிறமொழி கற்கும் மாணவர்களுக்குத் தமிழ்மொழி வகுப்புகளில் மட்டும்தான் தமிழ் பேசவும்,எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது உரக்கப் படித்து விரல் எழுத்துகளின் படிந்து வருவதால் வாசித்தல் திறன் மேன்மேலும் தெளிவடையும். தொடர்ச்சியாகப் படிக்கும்முறை,விட்டுவிட்டுப்படிக்கும்முறை,ஏற்ற இறக்கங்களுடன் விளக்கி இடைஇடையே பயிற்சி இவற்றை அளிப்பதால் மாணவர்கள் தமது தாய்மொழியில் பணிவாய்ப்பு அடையும்போது நேர்காணலிலோ,பிற இடங்களிலோ வெற்றி பெறுவார்கள்.அதனால் ஆசிரியர்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதத்திற்கு இருமுறை படிக்கும் பயிற்சியினை செயல்முறைத்திட்டமாகவோ,போட்டிமுறையிலோ அளிக்கலாம்.அன்றாடம் வீட்டில் பார்த்த செய்திகளையோ அல்லது அவர்களுக்குப் பிடித்த தலைப்பிலோ கணினியிலோ,பசும் பலகையிலோ,கரும்பலகையிலோ எழுதச் சொல்லி அதைப் படிக்கச் செய்யலாம்.