வெள்ளி, 25 ஜனவரி, 2013

பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை

கற்க கசடற   கற்பவை  கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்பது  வெறும் ஏட்டினில் படிப்பதற்காக மட்டும் திருவள்ளுவர்  அமைக்கவில்லை.
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.
பெற்ற சுதந்திரம் பேணிக்காக்க வேண்டும்.அதற்கு ஒழுக்கம் பேணுதல் அவசியம். முதல் ஒழுக்கம் எங்கிருந்து வர வேண்டும்?
குடும்பத்தில் பெற்றோரிடமிருந்து முதலில் வர வேண்டும்.
அலுவலகத்தில்  எடுத்து வரும் தாள், பேனா பயன்படுத்தினால் என்ன தவறு?
நிறைய முதலாளி வைத்திருக்கிறார் என்பதற்காக எடுத்துத் தரும் முதல் தீய பழக்கம் ஒழிய வேண்டும்.
இதன் விளைவு மாணவன் பள்ளியில் சக மாணவன் அதிகம் வைத்திருக்கும் பொருளில் கை வைக்கிறான்.பெரியவனாகியபிறகும் அதே பழக்கம் பெரிய அளவில் தொடர்கிறது.
வீட்டில் வேலை ஆக வேண்டும் என்பதற்காகச் சிறிய அளவில் தரும் கையூட்டு நாளை பள்ளியில் மதிப்பெண் குறைவாக எடுத்த நிலையில் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து - காலேஜ் சேர்க்கும் நிலைமை ஏற்பட வேண்டாமே?
கொடுக்கவில்லையென்றால் தற்கொலை, ஓடிப்போதல்
நிறைய இன்றைய குழந்தைகளிடம் காணப்படுகிறது.
 வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சினைகளைக்கூட இன்றைய எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் பள்ளியில் விவாதிக்கின்றனர். அப்படி இருக்கும்போது கணவன், மனைவி  வீட்டில் இருக்கும்போது எப்படி இருக்கவேண்டும். சிறு வீட்டில் வசிக்கும் பெற்றோர் இன்னமும் பொறுப்பாக இருக்கவேண்டும்.
கேட்கும்போது கையில் பணம்,மொபைல் -உறவினரின் பெருமைக்காக  ஆடம்பர உடைகள் வரவுக்கு மிஞ்சிய பிள்ளை வளர்ப்பு -இவை அனைத்தும் தவறானவை.
குழந்தையாக இருக்கும்போது குழந்தையின் வயதுக்கு மீறிய மழலை மொழிகேட்கும்போது  இனிமையாக இருக்கும்.நாம் கொஞ்சி மகிழ்வது  மனதுக்குச் சிறப்பாக இருக்கும். பிள்ளை பெரியவனாக வரும்போது நீ என்ன கேட்பது? என்பது போல் வரும் போது என்னை ஏன் எதிர்த்துக் கேள்வி கேட்கிறாய்? என்று கேட்கும்போது பிரச்னை வருகிறது.இதை உணர்ந்து சிறு வயது முதல் குழந்தைகளைத் தட்டி வைக்கவேண்டும்.
பள்ளியே மாணவனுக்குக் கோவில் என்பதை உணர்ந்துகொள்ளுமாறு செய்யவேண்டும்.ஆசிரியர்-இரண்டாம் பெற்றோர் என உணர வைக்கவேண்டும்.
தவறான திரைப்படங்கள்,செய்திகள் இவற்றின் மூலம் அறியப்படும் கருத்துகளை பிள்ளைகளிடம் அமர்ந்து பேசவேண்டும்.  ஒத்த வயதுடைய மாணவர்களிடையே ஏற்படும் கருத்துகள் கண்ணிழந்த குறைபாடுடையவர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போல்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். சில நல்ல விஷயங்கள் மாணவரிடம் எழலாம். அதைப்பாராட்டுதலும் பெற்றோர் கடமை. பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு நேரமில்லை எனத் தப்பிப்பது கூடாது. நாள்தோறும் அரைமணிநேரம் ஒதுக்கினால் போதுமானது.பணிக்குச் செல்கிறேன் என்று என்னைத் தொந்தரவு செய்யாதே எனக் கடிந்து பேசினால் அவர்கள் எந்த விஷயத்தை உங்களிடம் பெரியவனாக ஆன பிறகு பகிர்ந்து கொள்வார்கள்.


செவ்வாய், 8 ஜனவரி, 2013